Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தர்கா சென்று வீடு திரும்பிய போது… கார் கவிழ்ந்து விபத்து… ஒருவர் பலி..!!

கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.

கோவை, கிணத்துக்கடவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்புக்கு முன் கார் கவிழ்ந்து விழுந்தது. அதில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த நீரஜ் அலி மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் அம்பராம்பாளையம் தர்கா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் மலுமிச்சம்பட்டி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன ஓட்டுனர் காரை நிறுத்த முற்பட்டார்.

ஆனால் கார் பிரேக் பிடிக்காததால் சாலையில் கவிழ்ந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் காரில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த நீரஜின் மகன் முகமது அர்ஷத்(14) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Categories

Tech |