உடலிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் தர்பூசணி தோலின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தர்பூசணி கோடைக்காலங்களில் அதிகம் விற்பனை செய்யப்படும். அதில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடை காலங்களில் இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடலில் ஏற்படும் நீர் இழப்பில் இருந்து பாதுகாக்கும். நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது. ஆனால் மக்கள் அதன் உள்ளே இருக்கும் சிவப்பு பகுதியை சாப்பிட்டு, வெளிப்புறத் தோல் பகுதியை தூக்கி எறிவார்கள். தர்பூசணியின் தொலிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதன் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதுதவிர நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஜீரணத்திற்குத் பெரிதும் உதவும். தர்பூசணி தோல்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடல் எடையை குறைப்பதற்கு உதவும். உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால் நீங்கள் தர்பூசணி தோல்களை பயன்படுத்தலாம். அதில் மெக்னீசியம் உள்ளது. அது தூக்கமின்மையை போக்க உதவும். தர்பூசணியின் தோள்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.
இது கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி, இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். தர்பூசணி தோல்களை தேய்த்தால் உடல் சுருக்கங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்கும். அதுமட்டுமன்றி நீர்ச்சத்து குறைபாட்டை போக்குவதால் வறட்சி இல்லாமல் இருக்கும்.