Categories
அரசியல்

தர்மபுரி தொகுதி: “பாஸ்கரை வச்சு புதுசா பிளான் போட்ட திமுக….  இந்த தடவையும் “வட போச்சே” கதை தா அதிமுகவுக்கு….!!

தர்மபுரி நகராட்சியை கைப்பற்ற வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தர்மபுரி நகராட்சியை பொருத்தவரை கே.பி அன்பழகன் எப்படியாவது அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆட்சியில் அதிமுகவில் நிலவிய சில பிரச்சனைகள் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பச்சமுத்து கல்வி நிறுவன தாளாளர் பாஸ்கர் தன்னுடைய மனைவிக்கு எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். பாஸ்கருக்கு தருமபுரி பகுதியில் செல்வாக்கு அதிகம் என்பதால் அவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பலர் கூறி வருகின்றனர்.

இதேபோல் ஓய்வுபெற்ற சர்வேயர் கோவிந்தனின் மனைவி நகரச் செயலாளர் அன்பழகனின் மனைவி மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்டோரும் திமுகவின் வாய்ப்பை நோக்கி காத்திருக்கின்றனர். சேர்மன் பதவியை பொருத்தவரை திமுகவைச் சேர்ந்த பூக்கடை ரவி தனது மனைவிக்கு எப்படியாவது பதவி வாங்கி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தர்மபுரி தொகுதியை பொறுத்தவரை பாமகவுக்கு செல்வாக்கு அதிகம் என்பதால் 33 வார்டுகளிலும் தன்னுடைய வேட்பாளர்களை களம் இறக்கி வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாமக உள்ளது. அதேபோல் இதர கட்சிகளான மதிமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளும் 33 வார்டுகளிலும் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |