Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி: நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம்…. தொடங்கி வைத்த கலெக்டர்…..!!!!!

காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 எனும் இலக்கினை எட்ட அரசு மேற்கொண்டு வருகிற பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரால் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட 23 நடமாடும் வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டன. இதில் ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தர்மபுரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் வாயிலாக காசநோய் கண்டறியும் சேவையை தர்மபுரியில் கலெக்டர் சாந்தி துவங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து கலெக்டர் கூறியிருப்பதாவது “தர்மபுரியில் காசநோய் ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் அதை கண்டறிவதற்கு இந்த வாகனம் பயன்படுத்தப்படும்.

இவற்றில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மின் வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கும். இந்த வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை, எக்ஸ்ரேக்களை உடனே சரிபார்க்கும் கணினி பொருத்தப்பட்ட அறை போன்றவற்றுடன் அமைக்கப்பட்டு உள்ளது. காசநோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் தடுப்பு முறைகளை தெரிவிப்பதற்கு வண்ணதொலைக்காட்சி திரை, முகாம்களின்போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை போன்றவை இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீனடிஜிட்

டல் எக்ஸ்ரே கருவியானது 1 மணிநேரத்தில் 10 எக்ஸ்ரேக்கள் எடுக்கும் திறனுடையது. காச நோய் இருபவர்களை கண்டறிய அவர்களுக்கு சளிபரிசோதனை மற்றும் எக்ஸ்ரே ஆகியவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், ரூபாய் 500 உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படும்” என்று கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுத வல்லி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜேஷ்கண்ணா, காசநோய் சிகிச்சை பிரிவு துணை இயக்குனர் ராஜ்குமார், குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி, தொழுநோய் சிகிச்சை பிரிவு துணை இயக்குனர் புவனேஸ்வரி உட்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

Categories

Tech |