சேலம் மாவட்ட ம் ஆத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த தர்மபுரி போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரியில் அண்ணா நகரை சேர்ந்த அருணின் மகன் வெங்கடேஷ். 28 வயதாகும் அவர் கடந்த 2006ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பட்டாலியன் போலீஸ்காரராக பணிபுரிந்தார். கடந்த சில வாரங்களாக தலைவாசல் பகுதியில் பணியில் ஈடுபட்டார்.அங்கிருந்த அரசு பள்ளிகளில் 7 போலீஸ்காரர்களுடன் தங்கியிருந்த பொழுது நேற்று இரவு வெங்கடேசன் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டு பிணமாக தொங்கினார். அதைப் பார்த்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தானர்.
இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறினார்கள் . தகவல் தெரிந்ததும் விரைந்து சென்ற உயர் அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் அவர் உடலை பார்த்து கதறினர் .அதனால் அந்தப் பகுதியை ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியது .திருமணமாகாத அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரித்த போது பரபரப்பான தகவல் ஒன்று கிடைத்தது.
வெங்கடேசன் சமீபகாலமாக ஆன்லைனில் ரம்மி உட்பட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி அதிக அளவில் பணங்களை இழந்து கடன் வாங்கி பணத்தை திருப்பித் தர முடியாததால் கடன் கொடுத்தவர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக கூறியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்தனர் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது .