குஜராத்தில் குழந்தைகளை கடத்தும் பெண் என நினைத்து 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலுள்ள பிலிமோரா நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதே மாவட்டத்தில் உள்ள பரியா கிராமத்துக்கு தன் மகனுடன் சென்று நவராத்திரி பூஜைக்காக வீடு வீடாக யாசகம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர் குழந்தையை திருடுபவர் என நினைத்து பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி செருப்பால் அடித்தும் , சரமாரியாக தாக்கியும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை தாக்கியவர்கள் மீது குஜராத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.