கூகுள் குட்டப்பா படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார்.
மலையாளத் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. தற்போது இந்த படம் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன், லாஸ்லியா இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
#KoogleKuttapa teaser will be revealed by Actor @Siva_Kartikeyan on 27th Aug @ 5.30PM#KoogleKuttapaTeaser @ksravikumardir @Sabari_gireesn @gurusaravanan @TharshanShant #Losliya @iYogiBabu @Prankster_Ragul @GhibranOfficial @editorpraveen @twitavvi @Kavitha_Stylist @proyuvraaj pic.twitter.com/GVsgPg8cXv
— K.S.Ravikumar (@ksravikumardir) August 25, 2021
மேலும் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் சூர்யா இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டார். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு கூகுள் குட்டப்பா படத்தின் டீசரை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.