திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார். இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது திருடர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்தனர்.
இந்தநிலையில் பூமிநாதன் வீட்டுக்குச் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, பூமிநாதன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகுசெய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி, ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். தற்காப்புக்காக ஆயுதத்தை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.