தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களின் பணியே மகத்துவமானது. கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராது அயராது உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 சுகாதார பணியாளர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக எம்ஆர்பி தேர்வில் தேர்வாகிய ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.