தமிழகத்தில் ஊராட்சி,ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியது அரசு. இதில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணையை தமிழக பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவை தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம்.
DEE முடித்தவர்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நியமனம் செய்து கொள்ளலாம். தற்காலிக ஆசிரியர்களுக்கு 11 மாதங்களுக்கு ஊதியம் வழங்கிட ரூ.13.10 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் 5 ஆயிரம் ரூபாய் வேளாண்மை குழு மூலம் ஆதம்தோறும் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.