Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமனம்…. வேண்டவே….! வேண்டாம்….! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம்….!!!!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஜி வளாகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 4 ஆயிரத்து 989  இடைநிலை ஆசிரியர்கள், 5, 154 பட்டதாரி ஆசிரியர்கள், 3, 188 முதுகலை ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 331 ஆசிரியர்கள் பணியிடங்களில் தகுதியுள்ள நபர்களை அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஜி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சிலர் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் பங்கு பெற்று தற்காலிக ஆசிரியர் நியமனம் வேண்டவே வேண்டாம் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.

Categories

Tech |