தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான வாங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2022-23 கல்வியாண்டில் 01.6.2022 நிலவரப்படி பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாடின் கீழ் இயங்கும் ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப இடைநிலை பட்டதா,ரி முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய கல்வி சான்றிதழ்களுடன் மாவட்ட கல்வி அலுவலரிடம் நாளை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த பட்ட நிலையில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் நகலை வழங்கிய நிலையில் குறைவான விண்ணப்ப படிவங்களை இருந்ததால் ஏராளமானோர் விண்ணப்பங்களை வாங்குவதற்கு முண்டி அடித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.