Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்…. எவ்வளவு பேர் தேர்வு தெரியுமா?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் சென்ற ஜூன் 13 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் அரசின் பல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்றபடி ஆசிரியர்கள் இன்றி பற்றாக்குறை நிலவியது. இதை சரிசெய்ய ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கென ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் காலியாகவுள்ள 13,331 பணி இடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தற்காலிக பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரையிலும் தற்காலிக பணியிடங்களுக்கு 1 1/2 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவற்றில் 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முன்பே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 வருடங்களாக பணி கிடைக்காமல் காத்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை எனக்கூறி ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யலாம். பின் பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் போன்றோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Categories

Tech |