தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியின், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRBநடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். வருகின்ற 15ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தேர்வு செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வருகின்ற 18ஆம் தேதிக்குள் CEO- க்கள் ஒப்புதல் தர வேண்டும்.
தற்காலிக ஆசிரியராக தேர்வானவர்கள் வருகின்ற இருபதாம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் உடனே பணியில் சேர வேண்டும். 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையால் வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் அடிப்படையில் தற்காலிக நியமனங்கள் நடைபெற வேண்டும்.ஒரு காலியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் போது இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.