தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டே இருப்பதால், அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில், வழக்கு தொடர கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கும் பணிநிரந்தரம் உத்தரவு பொருந்தும். பணி நிரந்தர உத்தரவை 8 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு தற்காலிக ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தற்காலிக ஊழியர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.