தமிழகத்தில் தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக நியமிக்கப்பட்டவர்கள்.
இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. ஆறு மாத காலத்திற்கு பணியமனம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் மீண்டும் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் தற்காலிக அரசு செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பணி காலம் முடிவடைந்த நிலையில் இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.