Categories
தேசிய செய்திகள்

“தற்காலிக மருத்துவமனைகளை உடனே அமைத்திடுங்கள்”…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்….!!!

தென்னாபிரிக்காவில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவ தொடங்ககி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிகிச்சைக்காகவும் தடுப்பு நடவடிக்கைகாக்கவும் சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் தேவைப்பட்டால் தற்காலிக சிகிச்சை மையங்களை டி.ஆர்.டி.ஓ. உதவியுடன் ஏற்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க உரிய சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவிலான கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் திறக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |