சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியிலேயே வெளியேறி விட்டார். இதனைத் தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தான் முன்பு பணிபுரிந்து அஜித் ரவி என்ற நிறுவனம் தன்னை விட வளர விடாமல் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாக தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தற்கொலை அல்ல கொலை என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.