Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு தூண்டிய தொலைக்காட்சி ஆசிரியர்… வீட்டில் நுழைந்த போலீஸ்… வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிபப்ளிக் என்ற தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி என்பவரின் வீட்டில் மும்பை போலீசார் அதிரடியாக நுழைந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர். அவரை விசாரித்ததில், மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவி உடல் ரீதியாக தாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றிய வீடியோ ஒன்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளியானது. அதில் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசாரால் தாக்கப்பட்டு இருப்பது வெளிவந்துள்ளது. அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி மராட்டிய மாநிலத்தில் பத்திரிக்கை சுதந்திரம் மீதான தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |