தமிழகத்தில் கடன் ஆஃப்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபரின் ஆதார், பான் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களைப் பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி உள்ள விவரங்களை சட்ட விரதமாக பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த மோசடியான கடந்த ஆஃப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில் கூறியது, சென்னை சூளைமேட்டில் சேர்ந்த பாண்டியன் என்ற பட்டதாரி இளைஞர் கடன் ஆஃபின் மூலம் ரூ.5000 கடன் வாங்கி, செலுத்த தாமதம் ஆனதால் அந்த நிர்வாகம் அவரை அவமதித்ததால் தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை போலவே கடன் செயலிகளும் தற்கொலை கருவிகளாக மாறி வருகின்றன. அவற்றை இயக்குவது யார் என்பதே தெரியாது. ஆயிரக்கணக்கில் கடன் வழங்கும் கடன் செயலிகள், அந்த பணத்திற்கு அதிக வட்டி வசூலிக்கிறது.
இதனையடுத்து குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் கடன் பெற்றவர் மற்றும் அவரது குடும்ப பெண்களின் படங்களை தவறாக சித்தரித்து வாட்ஸ்அப் செயலிகள் மூலம் பரப்புகின்றன. இதனால் அவமானம் அடையும் கடன்காரர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி மற்றும் காவல்துறையும் எச்சரிக்கிறது. ஆனால் அவற்றை தடை செய்ய எந்த நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன. அதன் விளைவாக ஆன்லைன் கடன் செயலிகள் புற்றீசல் போல பெருகிவிட்டன. மேலும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை போலவே, கடன் செயலி தற்கொலைகளும் பெருக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது. எனவே ஆன்லைன் கடன் செயலிகளை முற்றிலுமாக தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.