Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. காதலனை கரம்பிடித்த சம்பவம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாளையம் ஆம்பூரில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஞ்சனி கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சனியும் அதே பகுதியில் வசிக்கும் செம்பருத்தி என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் ரஞ்சனி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனால் குடும்பத்தினர் ரஞ்சனியை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு ரஞ்சனி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் ரஞ்சனியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையே ரஞ்சனி தனது காதலனை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு முசிறி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் போலீசார் இரு தரப்பு பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ரஞ்சனியை காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |