ஆப்கானிஸ்தானில் ராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஹெல்மந்த் மாகாணத்திலுள்ள நஹ்ரி சரா மாவட்டத்தில் வெடிபொருள் நிரப்பிய காரில் பயங்கரவாதி ஒருவர் ராணுவ சாவடி அருகே வந்து வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலை தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்தனர். அதில் பெண்களும் அடங்குவர்.
மேலும் 3 பாதுகாப்பு படையினரும் ஒரு குழந்தையும் இந்த தாக்குதலினால் படுகாயமடைந்துள்ளனர். நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான்களின் ஆதிக்கம் ஹெல்மந்த் மாகாணத்தில் அதிகமாக இருப்பதால் அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.