அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது..
தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. வேளாண் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர் மெத்ரின் உள்ளிட்டவை பூச்சிக்கொல்லி மருந்துகளாக செயல்பட்டு வருகின்றன. இது ஆங்காங்கே ஊரகப்பகுதியில் நிறைய பேர் வாங்கி பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்கொலைக்கு பயன்படுத்ததாக தகவல்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது வரக்கூடிய நாட்களில் இந்த சோதனை அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள் முழுவதுமாக தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எனவே வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர் மெத்ரின், குளோரோபைரிபாஸ் + சைபர்மெத்ரின், குளோரோபைரிபாஸ் ஆகிய 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்ட்டுள்ளது.
மேலும் 3 சதவிகிதம் மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி, விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதாகவும், 2017- 2018 ல் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது..