இன்றைய காலகட்டத்தில் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக உடல் மற்றும் மனதிற்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். மேலும் திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையில் வாகனம், வீடு ஆகியவை வாங்கி ஓரளவிற்கு வசதி வாய்ப்புகள் வந்த பின்புதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஓடிக் கொண்டிருக்கும் வேலையில் தோல்விகள் ஏற்படும் போது அதை ஏற்க முடியாமல் விபரீத முடிவை எடுக்கின்றனர். மது பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களும் தற்கொலை எண்ணம் வருகிறது.
தனிக் குடும்பமாக இருக்கும் போது அவர்களுக்கு ஒரு பிரச்சினைகளை கூட எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், அதற்கான வழிகாட்டுதல் இல்லாமல் தற்கொலை தான் வழி என்ற முடிவு எடுக்கிறார்கள். இவ்வாறு மன அழுத்தம் மூலமாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உடையவர்களுக்கு ஆலோசனை வழங்க தற்கொலை தடுப்பு மையங்கள் உள்ளன. அந்த வகையில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்து கொள்ள எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற மாநில உதவி மையம் 104 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் உதவிக்கு தற்கொலை தடுப்பு உதவி மையத்தை 044-24640050 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.