இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அளவில் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு தற்கொலையில் ஈடுபடுபவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. 2020ஆம் வருடம் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 419 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஒட்டுமொத்த இந்தியாவில் நிகழும் தற்கொலைகளில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. வாழ்க்கை குறித்த தவறான புரிதல், பிரச்சனைகள் ஆகியவை தற்கொலைக்கு வழி வகுக்கின்றன. காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, வாழ்க்கையில் ஏற்படும் தொடர் தோல்விகள், தகுதியான வேலை கிடைக்காத போது ஏற்படும் விரக்தி ஆகியவை தற்கொலைக்கான முக்கிய காரணங்கள். இந்திய பெண்களின் தற்கொலை விகிதம் உலக விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த மரணங்கள் பெரும்பாலும் வரதட்சனை கொடுமை, கட்டாய திருமணம், குடும்ப வன்முறையால் ஏற்படுகின்றன.
தற்கொலைக்கு முயலும் ஒருவரின் மனநிலை செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தடுவார்கள். உணர்வுகளை பாதிக்கும் செயல் ஒன்று நடக்கும் போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் உணர்ச்சி பெருக்குமான நிலை. தேர்வு முடிவு வெளியாகும் நாளில் தோல்வி அடைந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றால் அதே நேரம் அதை தடுத்துவிட்டால் பின்னர் அந்த முயற்சியில் ஈடுபட மாட்டார்.
ஏனெனில் தோல்வி அறிந்த நாளில் இருக்கும் உணர்ச்சி பெருக்கு பின்னர் குறைந்துவிடும் அல்லது அது இல்லாமல் போய்விடும். அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்தால் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குடும்பத்தினரிடமும் அல்லது உறவினர்களிடமோ யாரிடமாவது கூற வேண்டும். பின்னர் மனநல மருத்துவர், மனநல சமூக பணியாளர், மனநல ஆலோசகர் ஆகியோரில் ஒருவரை பார்த்து சிகிச்சை, ஆலோசனையும் பெறுவது நல்லது. இதற்காக உதவி மையங்களும் உள்ளன.
அசாம்
சாரதி 104
சண்டிகர்
ஆஷா ஹெல்ப்லைன்
+91 172 2735436, +91 172 2735446
திங்கள் முதல் சனிக்கிழமை வரை: காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை
சத்தீஸ்கர்
ஆரோக்கிய சேவா: சுகாதார பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனை மையம்
104
டெல்லி
சுமைத்ரி: +91 011 23389090
திங்கள்-வெள்ளி மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மற்றும் சனி-ஞாயிறு காலை 10 மணி மற்றும் இரவு 10 மணி வரை.