இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமாகி கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் மனநலம் பாதிக்கப்படுவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அதாவது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதைப் போல மன ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும். சிலருக்கு சிறு சிறு விஷயங்களால் கூட மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதாவது கேலி கிண்டல் பேச்சு மற்றும் உறவினர் நண்பர்களுடன் மனக்கசப்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மனநோய் பிரச்சனைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் இந்த சிறிய சிறிய பிரச்சனைகளால் தான் மனநோய் உண்டாகி அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறு பெரியவர்கள் மற்றும் டீன் ஏஜ் வயதினர் மனநலம் பாதிக்கப்படுவதற்கான பொதுவான அறிகுறிகள் குறித்து இதில் பார்க்கலாம்.
பெரியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தெளிவுற்ற சிந்தனை, நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல், அதிக மகிழ்ச்சி கவலை, தேவையில்லாத பயம் மற்றும் சோகம், தனிமையில் இருப்பது, உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம்,இல்லாத விஷயத்தை யாரோ பேசுவது அல்லது பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது, தற்கொலை எண்ணங்கள், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கண்டுபிடிக்க முடியாத உடல் கோளாறுகள், அளவுக்கு அதிகமான கட்டுப்படுத்த முடியாத போதைப் பழக்கம், திரும்பத் திரும்ப தொந்தரவு செய்தல் மற்றும் விரும்பத் தகாத எண்ணங்கள், செய்து முடித்த செயலை திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் மற்றவர் மீது சந்தேகப்படுவது, அனைத்திற்கும் ஒருவரை சார்ந்து இருப்பது, தொடர்ந்து பாலியல் எண்ணங்கள் அல்லது ஆசை இல்லாமல் இருத்தல்போன்ற செயல்களில் பெரியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் ஈடுபடுவார்கள்.
அதுவே டீன் ஏஜ் வயதினர் அதாவது 10 முதல் 18 வயது உடையோர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் பள்ளி செயல் திறனை மாறுதல் அதாவது திடீரென மதிப்பெண் குறைதல். தினசரி செயல்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் இருப்பது. உணவு மட்டும் தூங்கும் பழக்கத்தில் மாற்றம், உடல் ரீதியான பிரச்சனைகள், பள்ளிக்கு செல்லாமல் இருப்பது அல்லது திருடுதல் மற்றும் பொருள்களை சேதப்படுத்துதல், உடல் எடையை குறித்த மிகுந்த பயம், பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இருத்தல், அடிக்கடி கோபம், மிகவும் பிடித்த விஷயத்தில் நாட்டம் இல்லாமல் போவது, அதிகமாக சிறுநீர் கழித்தல், திரும்பத் திரும்ப ஒரு வேலையை செய்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.