இன்றைய காலகட்டத்தில் ஏராளமான இளம் வயதினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. பிரச்சனையை எதிர்த்து போராடுவதே வெற்றியின் அடையாளம். உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் 8 லட்சம் தற்கொலைகள் நடக்கின்றதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளிலும் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழந்து வருகிறோம். அந்த உயிர் ஒரு குழந்தையாகவோ, பெண்ணாகவோ, ஆசிரியராகவோ, ஆணாகவோ இருக்கலாம். தற்கொலை முயற்சிகளோ அதைவிட 25 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும் உண்மை அது கிடையாது ஒவ்வொரு தற்கொலையின் பின்னால் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் இருக்கிறது. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைக்கு காரணமாக அமைகிறது. உலக அளவில் கடந்த 45 வருடங்களில் மட்டும் தற்கொலை 60% அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. நாம் காலால் ஒரு பந்தை தரையில் தட்டினால் அது மீண்டும் மேலே எழும்புவது போல நம் ஒவ்வொரு உள்ளங்களிலும் சவால்களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கும்.
நவீன உலகில் பறந்து கிடக்கும் நாம் செல்போன்களையும, கணினிகளையும் மட்டுமே உற்ற நண்பர்களாக பார்க்கிறோம் . ஆனால் நம்முடைய பிரச்சினைகளை நம்முடன் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை.தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவதற்கு பல்வேறு ஹெல்ப்லைன் உதவி மையங்கள் இருக்கின்றன. அவற்றின் உதவி நாடினால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். மனதில் தற்கொலை எண்ணம் உதித்தவர்கள், என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம்.
தற்கொலைத் தடுப்பு மையம் – 104
அமெரிக்கா: 1-800-273-TALK (8255) என்ற எண்ணில் நேஷனல் சூசைய்டு பிரிவென்ஷன் லைஃப்லைனை (National Suicide Prevention Lifeline) தொடர்புகொள்ளவும்.
பெண்களுக்கான தீர்வு மையம் – 1091
ஆஸ்ரா – 91-9820466726