சித்ரா தற்கொலையின் பின்னணியில் அவரது கணவர் இருக்கக்கூடும் என சின்னத்திரை பிரபலங்கள் சந்தேகிக்கின்றனர்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக புகழ்பெற்ற சித்ரா ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தற்கொலை பின்னணியில் அவரது கணவர் ஹேமந்த் இருக்கக்கூடும் என்று சிலர் சந்தேகிக்கின்றனர் . இதுகுறித்து சித்ராவின் நெருங்கிய தோழியான நடிகை ரேகா நாயர் பேட்டியளித்துள்ளார். அதில் சித்ராவின் கணவர் பற்றி தனக்கு தெரியும் என்றும் அவர் நல்லவர் இல்லை மற்றும் இது காதல் திருமணம் என்பதால் அவர் சரியான ஆள் இல்லை என்று சித்ராவிடம் நான் கூறினேன்.
ஹேமந்த்திற்கும் சித்ராவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இம்முடிவை எடுத்திருப்பார். அவரது உடலில் தற்கொலைக்கான அடையாளங்கள் இல்லை. அதே நேரத்தில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவராக தற்கொலை செய்யவில்லை . தற்கொலை செய்ய தூண்ட பட்டுள்ளார். இதில் “சித்ரா ஹேமந்தை கொன்று இருந்தால்கூட நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.