அரியலூர் மாவட்டத்தில் தனது மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லூர் என்ற கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் சக்தி ரூபா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் குடும்ப தகராறு காரணமாக மகள் சத்திய ரூபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் தனது மகள் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் ஜெயந்தி மனமுடைந்த நிலையில் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் ஜெயந்தி நேற்று முன்தினம் தனது மகள் தீவைத்து கொன்ற அதே இடத்தில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ஜெயந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.