சென்னை மாவட்டத்தில் உள்ள கொத்திமங்கலம் கிராமம் எம்.ஜி.ஆர் நகரில் ரவி என்பவர் ரசித்து வருகிறார். இவரது மகன் ராபின்(24) ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராபின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட ராபின் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராபின் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த உறவினரான ராமச்சந்திரன்(47) என்பவர் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார்.
அப்போது மின் விளக்கை எரிய செய்வதற்காக மின் இணைப்பு கொடுத்த போது மின்சாரம் தாக்கி ராமச்சந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கழுங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராமச்சந்திரனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.