Categories
மாநில செய்திகள்

தற்போதுவரை: அதிமுக 95 இடங்கள்…. திமுக 138 இடங்கள்…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன் முன்னிலை விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது வரை எண்ணப்பட்டு வரும்  நிலவரங்களின் அடிப்படையில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 95 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது. பாமக 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது.

Categories

Tech |