பிரபல பாலிவுட் நடிகரான சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே 2019 ஆம் வருடம் வெளியான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். தற்போது விஜய் தேவரகொண்டா உடன் லைகர் படத்தில் நடித்திருக்கின்றார். தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. பிரமோஷன் பணிகளில் இறங்கி இருக்கின்றனர் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும்.
இது தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகை அனன்யா பாண்டே பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண்ட் ஜோகர் தொகுத்து வழங்கும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் தன்னுடைய லேட்டஸ்ட் க்ரஷ் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார் அனன்யா பாண்டே. அதாவது இந்த கிரகத்திலேயே கொஞ்சம் கூட நேர்மையே இல்லாத ஆள் நான்தான் என தெரிவித்துள்ளார். மேலும் இஷான் கட்டர் உடனான ரிலேஷன்ஷிப் மற்றும் கார்த்திக் ஆர்யன் உடன் வரும் வதந்திகள் பற்றி பேச அனன்யா மறுத்துவிட்டார். இருப்பினும் தன்னுடைய புதிய க்ரஷ் ஆதித்யராஜ் கபூர் தான் எனவும் அவர் ஹாட்டாக இருப்பதாக தனக்கு தோன்றுவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே காபி வித் கரன் 7 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை அனன்யா பாண்டேவும் பங்கேற்றுள்ள ப்ரோமோக்கள் வெளியாகி வருகின்றது.