மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையில் உறுப்பினராக உள்ள நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று இபிஎஸ் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. உழைப்பாளர் தினமான இன்று அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால் நிதி உதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.