தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முப்பத்தி நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க 8 கோடியே 50 லட்ச ரூபாயை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 34 பேரின் பெயர்ப் பட்டியலையும் அரசாணையில் வெளியிட்டுள்ளது.அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25 லட்சம் நிதி உதவி வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனருக்கு 8 கோடியே 50 லட்ச ரூபாயை விடுவித்துள்ளது.
Categories