ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமையல்காரர் லாலா ராம் குர்ஜாத் என்பவர் பணியாற்றி வருகிறார்., இந்நிலையில் சமைத்த உணவை தலிப் பெண்கள் மாணவர்களுக்கு பரி மாறியதாக கூறப்படுகிறது. இதற்கு லால் ராம் எதிர்ப்பு தெரிவித்தார். சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருந்த மாணவர்களிடம் தலித்துகளால் பரிமாறப்பட்டதால் அதை தூக்கி எறியுமாறு லால் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மாணவர்கள் லால் ராம் அறிவுறுத்தலை பின்பற்றி உணவை வீசினர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அவர்களது உறவினர்கள் சிலர் பள்ளிக்கு வந்து சமையல்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனையடுத்து போலீசாரின் விசாரணையில், சமையல்காரர் லால் ராம் குர்ஜார் விரும்பும் மாணவர்களை அழைத்து பெரும்பாலும் உயர் சாதியை சேர்ந்த மாணவர்களை கொண்டு பிற மாணவர்களுக்கு உணவை பரிமாற சொல்வது வழக்கம். ஆனால் நேற்று ஒரு ஆசிரியர் தலித் சிறுமிகளை கொண்டு உணவு பரிமாறச் சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த சமையல்காரர் தலித் சிறுமி வழங்கும் மதிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு பள்ளியில் 2 தலித் சிறுமிகளிடம் பாகுபாடு காட்டிய சமையல்காரர் கைது செய்யப்பட்டார்.