உயர் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தலித் சிறுவனை காலை நக்க வைத்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கிய ஒருவர் காலை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2 நிமிடம் 30 வினாடிகள் ஓடுகிறது. முதலில் சிறுவன் தரையில் அமர்ந்து கால்களில் கை வைத்திருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்துள்ளார். சுற்றியுள்ள சிலர் பாதிக்கப்பட்டவர் பயந்து நடுங்குவது பார்த்து சிரிக்கின்றனர். அதில் ஒருவர் பாதிக்கப்பட்டவரிடம் உயர் ஜாதி பெயரை உச்சரித்து அவரை துஷ்பிரயோகம் செய்கிறார்.
இனி அப்படி ஒரு தப்பு செய்வீர்களா என்று மற்றொருவர் பாதிக்கப்பட்டவரிடம் கேட்கின்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஏழு பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 10ஆம் தேதி நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் 10ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் ,தனது விதவைத் தாயுடன் வசித்து வருவதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவரின் தாய் குற்றம்சாட்டப்பட்ட சிலரின் வயல்களில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த சிறுவனின் தாய் வேலை செய்ததற்கு பணம் கேட்டதற்காக இப்படி செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.