ராஜஸ்தான் மாநிலமான ருக்காசர் கிராமத்தில் தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27ஆம் தேதி உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ராகேஷ் மேக்வால் கூறியிருப்பதாவது, முன்விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தினர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தை அடுத்து அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தனது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவதூறாக திட்டினார்கள் என்றும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவத்தில் தொடர்புடைய உமேஷ் ஜாட் மற்றும் பீர்பால் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது “பாதிக்கப்பட்ட நபரின் உடலில் காயங்கள் இருக்கின்றன. ஆகவே அவர் தாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. எனினும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்”என்று கூறினர்.