உத்திரபிரதேச மாநிலத்தில் கிராம தலைவர் இரண்டு பேர் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் தாஜ்பூர் கிராமத்தின் தலைவராக இருப்பவர் சக்தி மோகன். இவரும் பக்கத்து கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜேசிங் என்பவரும் தினேஷ் குமார் என்கின்ற தலித் வாலிபரை பொதுமக்கள் முன்னணியில் காலணியால் அடித்துள்ளார். இதன் பிறகு கொலை மிரட்டல் விடுத்ததுடன் ஜாதி பெயரை கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த அவர்கள் வைரலாக்கியுள்ளன.
CASTE is the worst virus.
A SC man was beaten up with slippers by the village head and threatened with death in UP's Muzaffarnagar. Horrible. @UNHumanRights @OHCHRAsia pic.twitter.com/a3Er6jdq9i
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) August 20, 2022
அந்த சமூக மக்களை அவமதிக்கும் நோக்கில் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என்று கூறப்படுகின்றது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கிராம தலைவர் சக்தி கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.