Categories
உலக செய்திகள்

தலிபான்களுக்கு எதிரான போராட்டம்… துணிச்சலுடன் செயல்படும் இளைஞர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவில் கல்வி பயின்ற இளைஞர் ஒருவர் தலிபான்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் மாகாணத்தின் புகழ்பெற்ற தளபதியின் மகனான Ahmad Massoud (32) தலிபான்களுக்கு எதிராக தனது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் Ahmad Massoud தலிபான்களுக்கு தங்களது போராளிகள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள் எனவும், இதுவரை 100 தலிபான்களை கொன்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரித்தானியா மற்றும் அமெரிக்க ராணுவத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்ட போராளிகள் தற்போது காபூல் நகருக்கு வடக்கே அமைந்துள்ள பஞ்ஷிர் பிராந்தியத்திற்கு படையெடுத்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தலிபான்களுக்கு எதிரான Ahmad Massoud-ன் நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை ஜனாதிபதி Amrullah Saleh ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் Ahmad Massoud-ன் படையினருக்கு கடந்த 3 நாட்களில் பெரும் ஆதரவு திரண்டு வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |