ஆப்கானிஸ்தானில் ஹெரத் பகுதியில் இன்று காலை மினி பேருந்துகளில் தலிப்பான் பாதுகாப்பு படையினர் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹெரத் நகரின் மையத்தில் தலிப்பான் 207 அல்ஃபாரூக் கார்ப்ஸ் பிரிவை சார்ந்த பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அதிகாரிகள் உறுதிப்படுத்தி இருந்தாலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹெராத் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது ஷா ரசூல், தாக்குதல் நடத்தியவர்கள் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை.