Categories
உலக செய்திகள்

தலிபான் பயங்கரவாதிகளின் அட்டகாசம்…. கோபத்தில் துப்பாக்கியை கையில் ஏந்திய சிறுமி… 2 பேர் சுட்டுக்கொலை…!!

பெற்றோர்களை கொன்ற தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் உள்ள கிரிவா கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி க்வமர் கல். ஆப்கான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் சிறுமியின் பெற்றோரை சென்ற வாரம் தாலிபன் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அந்தத் தாக்குதலில் தப்பித்த சிறுமி கல் தனது வீட்டில்  பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியை எடுத்து தனது பெற்றோரை கொன்ற தீவிரவாதிகளில் இரண்டு பேரை அப்போதே சுட்டுக் கொன்று விட்டார்.

சிறுமி சுட்டதில் தீவிரவாதிகள் குழுவில் இருந்த சிலரும் காயத்தோடு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை அந்த மாகாணத்தில் உள்ள  உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். துப்பாக்கி ஏந்தியவாறு இருக்கும் சிறுமி க்வமர் கல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தில் உள்ள அந்த சிறுமியை தாக்க மீண்டும் சில தாலிபன் தீவிரவாதிகள் வந்துள்ள நிலையில் உள்ளூர் கிராமவாசிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து அந்த தீவிரவாதிகளை விரட்டி அடித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

 

Categories

Tech |