நடிகை சமந்தா தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா ஒர்க்கவுட் செய்கிறாரா? அல்லது இது புது வகை யோகாவா? எப்படி இவரால் பேலன்ஸ் பண்ண முடியுது ? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.