நடிகை அஞ்சலி தலைகீழாக தொங்கியபடி யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி . இதைத்தொடர்ந்து இவர் அங்காடித்தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகை அஞ்சலி தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
I bend so I don’t break 🧘🏻♀️#AerialYoga pic.twitter.com/M86p01X00g
— Anjali (@yoursanjali) July 25, 2021
இந்நிலையில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்த புகைப்படங்களை அஞ்சலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது .