Categories
தேனி மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர்…. உழவு பணியின் போது பலியான ஓட்டுநர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் டிராக்டர் ஓட்டுனரான சோனைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்ததால் இடிபாடுகளில் சிக்கி சோனைமுத்து படுகாயமடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சோனை முத்துவை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சோனை முத்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |