Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற விழுந்த கார்…. நண்பரை வழியனுப்ப சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சென்னையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயரான முகுந்தன் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை தேடி வந்துள்ளார். இவருடன் சிவகுமார் என்பவரும் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை சிவகுமார் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் தனது நண்பரை முகுந்தன் விமான நிலையம் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிவகுமாரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைத்துவிட்டு முகுந்தன் மட்டும் காரில் பல்லாவரம்-துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி சதுப்பு நிலத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |