போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை சாலையில் வைத்து பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சங்ரிகா திவாரி என்ற பெண் மிக்சின் என்பவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் களபதேவி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இருவரையும் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஏக்நாத் பார்த்தே என்பவர் தடுத்து நிறுத்தி தலைக்கவசம் அணியாததற்கான காரணத்தை கேட்டுள்ளார். அப்போது சங்ரிகாவுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பார்த்தே அந்த பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.
இருவர் இடையே தகராறு முற்றிய நிலையில் கோபம்கொண்ட சங்ரிகா திடீரென காவலரின் சட்டையைப் பிடித்து சரமாரியாக தாக்க தொடங்கினார். இவை அனைத்தையும் உடனிருந்த மிக்சின் என்பவர் தனது செல்போனில் காணொளியாக பதிவு செய்தார். காவலரை பெண் சாலையில் வைத்து தாக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த உடன் இருந்த மற்ற காவலர்கள் தடுக்க முயற்சித்தனர். ஆனால் முடியாததால் பெண் காவல் அதிகாரி வந்து சங்ரிகா மற்றும் மிக்சின் ஷேக் என இருவரையும் கைது செய்தனர்.