கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் கார் ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஜெய்பட்டேல், சந்திரகான் ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு நேற்று தென்காசி நோக்கி காரில் புறப்பட்டனர்.
இந்நிலையில் கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைப்பாதையில் பண்ணைக்காடு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் சுப்பிரமணி உள்பட 3 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.