சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை தர்மராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கும்டாபுரம் அடுத்த சாலையில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தாறுமாறாக ஓடிய சரக்கு வேன் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் தர்மராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.