Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி….. பாமாயில் பிடித்த பொதுமக்கள் விரட்டியடிப்பு….. பரபரப்பு சம்பவம்….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலிருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பியமாதேவி ஏரி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் டேங்கர் லாரி சேதமடைந்து பாமாயில் கீழே கொட்டியதை பார்த்த பொதுமக்கள் பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் கேன்களில் பாமாயிலை பிடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொது மக்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |