பேருந்து மோதியதால் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இருந்து ரெட்டிசாவடி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட்டிசாவடி அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து ஷேர் ஆட்டோ மீது உரசி சென்றுள்ளது. இதனால் ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனை அடுத்து படுகாயமடைந்த பயணிகளை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான ஷேர் ஆட்டோவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.